செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (10:05 IST)

தந்தையின் உடலை இலங்கைக் கொண்டுவர முயற்சி – தனிமைப்படுத்திக் கொண்ட லாஸ்லியா!

கனடாவில் மரணமடைந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் உடலை இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பிரபலமானதை அடுத்து லாஸ்லியா கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர் வேலை பார்த்து வந்த கனடா நாட்டிலேயே மாரடைப்பு வந்து கடந்த 15ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து இந்தியாவில் இருந்த லாஸ்லியா உடனடியாக இங்கிருந்து இலங்கைக்கு கிளம்பி சென்றுள்ளார். 

லாஸ்லியா இப்போது 14 நாட்கள் குவாரண்டைனில் உள்ள நிலையில் கனடாவில் இருக்கும் மரியநேசனின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.  இலங்கையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு எழுமா என்ற சந்தேகங்களும் உள்ளன. ஆனால் விதிமுறைகளைப் பின்பற்றியே அந்த உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.