திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (12:12 IST)

கமல்ஹாசனை இளமையாக தயார் செய்தோம்… ஆனால்..? – படத்தில் வராத காட்சி!

விக்ரம் படத்தில் கமல்ஹாசனை இளமையாக காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபது மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம்.

பேன் இந்தியா படமாக கடந்த 3ம் தேதி வெளியான இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில் 5 நாட்களில் உலக அளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன் இளமையாக தோன்றும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்காக ஹாலிவுட்டிலிருந்து டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் படத்தில் கமல் இளமையாக தோன்றும் காட்சிகள் ஏதும் வராதது ஏமாற்றத்தை அளித்தது.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய லோகேஷ் கனகராஜ் ”விக்ரம் படத்தில் டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி கமல்ஹாசனை இளமையாக காட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டது. பணிகள் முடிய தாமதமானதால் அதை படத்தில் பயன்படுத்த முடியாமல் போனது. அந்த காட்சிகள் எக்ஸ்க்ளூசிவாக பின்னர் வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.