1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (18:52 IST)

லோகேஷ் கனகராஜின் 10 நிமிட LCU குறும்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. !

ஒரு படத்தின் கதாபாத்திரங்களை மற்றொரு படத்திற்குக் கொண்டு செல்வது சில இயக்குனர்களுக்கே மட்டுமே இயல்பானதாய் இருக்கும். அதில் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய படங்களில் முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை கொண்டு வருவதில் தனித்துவம் காட்டி, அதனை லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் (LCU) என அழைக்குமளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
 
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் LCU கதாபாத்திரங்களின் பத்து நிமிட குறும்படத்தை விரைவில் வெளியிட உள்ளதாகவும், அதற்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். "1 ஷாட், 2 கதைகள், 24 மணிநேரங்கள்" என்ற வாசகங்களுடன், சுற்றிலும் துப்பாக்கிகளால் சூழப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே ’ChapterZero’ என்கிற குறும்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
 
இந்த 10 நிமிட குறும்படத்தில் லோகேஷ் இயக்கிய 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' மற்றும் 'லியோ' படங்களில் இருந்த முக்கிய கதாபாத்திரங்கள் இணைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
ரஜினியின் 'கூலி' படத்திற்கு பின் அவர் இயக்கவுள்ள 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2' போன்ற வரவிருக்கும் படங்களில் LCU கதாபாத்திரங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.