வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (14:36 IST)

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் ரோலக்ஸ் என்ற டைட்டிலில் ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும் அந்த கதையை லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் கூறிய போது அதில் நடித்த சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின. அதை லோகேஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவருமே உறுதிப் படுத்தியிருந்தனர்.

அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்திலும் விரைவில் தான் நடிக்க இருப்பதாகவும் சூர்யா கூறியிருந்தார். ஆனால் இந்த படங்கள் தற்போதைக்குத் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பது போல தெரியவில்லை. ஏனென்றால் இருவருமே வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் கங்குவா படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்டு பேசிய சூர்யா இதுபற்றி பேசியுள்ளார். அதில் “நான் ரோலக்ஸ் கதையை வெறும் அரைநாளில் நடித்து முடித்தேன். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு கதை சொன்னார். இரும்புக் கை மாயாவி என்ற கதையையும் சொன்னார்.  இருவருமே வேறு படங்களில் பிஸியாக உள்ளோம். காலம்தான் பதில் சொல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.