சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகிறாரா லோகேஷ் கனகராஜ்?
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது.
படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் லோகேஷின் கதாபாத்திரம் சிறப்புத் தோற்றமாக இல்லாமல் அவர்தான் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக லோகேஷ் இன்னும் தன் முடிவை சொல்லவில்லை என்றும் அவர் முழுத் திரைக்கதையையும் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.