திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 மே 2024 (07:24 IST)

ரஜினியின் கூலி படத்துக்காக பாலிவுட் நடிகருக்கான தேடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் புல்லரித்தனர். இதையடுத்து படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தை இந்தியா முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் ஒருவரை படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது. இதற்காக ஷாருக் கான் மற்றும் ரண்வீர் சிங் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் சில காரணங்களால் நடிக்காமல் விலகிக் கொண்டனர். இந்நிலையில் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஒரு பாலிவுட் நடிகருக்கான தேடலை லோகேஷ் & கோ தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.