திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:28 IST)

தெலுங்கு திரையுலகுக்கு அதிர்ச்சி கொடுத்த லிங்குசாமி… இந்தி டப்பிங்கில் இரட்டிப்பு லாபம்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தின் இந்தி டப்பிங் உரிமை விலை போயுள்ளது.

தமிழில் வாய்ப்புக் கிடைக்காத இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்‌ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவரின் கதாபாத்திரம் திரைக்கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமம் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். வழக்கமாக ராம் பொத்திலேனியின் படத்துக்கு 8 கோடி ரூபாய் வரைதான் மார்க்கெட். ஆனால் லிங்குசாமி இருப்பதால் அது அப்படியே இரட்டிப்பு ஆகியுள்ளதாம்.