திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (14:32 IST)

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகருக்கு இன்று பிறந்தநாள்!

தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கும் மகேஷ் பாபு முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகன். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ராஜகுமாருடு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 
 
அதையடுத்து முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை அவருக்கு தேடித்தந்தது.   நல்ல உயரம், ஹேண்ட்ஸம் லுக் என ஆக்ஷன் ஹீரோவாக தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த மகேஷ் பாபு இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்