ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (13:35 IST)

''வாங்க போருக்கு போகலாம் லோகேஷ்’'- நடிகர் மன்சூர் அலிகான்

mansoor alikhan- lokesh
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தின் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இந்த  நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீனத்திற்கு அழைத்துள்ளார் மன்சூர் அலிகான்.

‘’ரூ.500 கோடி முதல் போட்டு லட்சம் பேருக்கு வேலை கொடுத்து ஒன்றரை வருடம் பாடுபட்டு ரூ.1000 கோடி வசூலுக்கு  உழைக்கிறோம். ஆனால், அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, ரூ.10 ஆயிரம் கோடி ரூ.20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான். லோகேஷ் என்ன வைச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல. அதனை விட்டுவிட்டு, தம்மாத்துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு…..இல்லைன்னா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கலாம்…. 500 மிட்டரி டேங்கர், 500 ஆர்முடு ஏர் கிரேப்ட் எடுத்துக் கொண்டு வாருங்கள்…போருக்குப் போய் எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சிட்டு வரலாம் அப்பாவிங்க சாகுறாங்க… சும்மா டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துட்டு வாங்க போருக்கு போகலாம் லோகேஷ்’’ என்று தெரிவித்துள்ளார்.