செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:19 IST)

விஜய்யின் லியோ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது எப்போது?

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகி நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்தது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் சரியாக எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது. முதல்வாரத்தில் மட்டும் 461 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படம் தீபாவளி முடிந்து நவம்பர் 17 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.