ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (11:10 IST)

காத்தாடும் தியேட்டர்கள்.. இலவசமாக வழங்கப்படும் ‘லியோ’ டிக்கெட்டுக்கள்..!

தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தாலும் அதை நம்புவதற்கு நார்மல் பார்வையாளர்கள் தயாராக இல்லை.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய ஆறு நாட்கள் மட்டுமே இந்த படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது என்றும் புதன் கிழமையிலிருந்து தியேட்டர்கள் காற்றாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்கள் லியோ டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி தங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் லியோ டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று கூவி கூவி விற்கப்படும் நிலைக்கு இந்த படம் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே லியோ வெளியிட்ட தியேட்டர்களில் தற்போது 100 பார்வையாளர்களுக்குள் தான் இருக்கிறார்கள் என்பதும் சில தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva