1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (17:38 IST)

தடையை மீறி ‘லியோ’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டால்.. காவல்துறை எச்சரிக்கை..!

நெல்லை மாவட்டத்தில் ‘லியோ’ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தடை மீறி லியோ படத்தை கொண்டாடும் நிகழ்ச்சி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. 
 
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை வெளியாக இருப்பதை அடுத்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் லியோ படத்தை கொண்டாட்டத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நெல்லை காவல்துறை இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
நெல்லையில் லியோ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தடை என்றும் தடையை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெல்லை காவல்துறை எச்சரித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
 
Edited by Siva