ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:06 IST)

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்: இதுதான் கதையாம்!

Legend Saravanan
லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட்  என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவரிடம் சரவணன் கதையை கேட்டு முடிவு செய்துவிட்டதாகவும் இந்த கதை முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது
 
தி லெஜண்ட் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கதையாக இருந்த நிலையில் அதற்கு நேரெதிராக ரொமான்ஸ் மற்றும் காமெடி படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்தில் நடிப்பார்கள் என்றும் இந்த படத்திலும் பாலிவுட் நடிகை தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.