1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:03 IST)

தி லெஜண்ட் அண்ணாச்சியை மேடையில் அவமானப்படுத்திய ராதாரவி… சர்ச்சை பேச்சு!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.. தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ஜூலை 29 ஆம் தேதி வெளியாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், விளம்பரம் காரணமாக வசூலில் குறைவைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் போட்ட காசைப் பார்த்தால் அதில் கால்பங்கைக் கூட எடுத்திருக்காது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னணி நடிகரான ராதாரவி அண்ணாச்சியை இழிவுப் படுத்தும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராதாரவி இதுபோல மேடையில் பல நடிகர் நடிகைகளை இழிவாக பேசிய நிகழ்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.