ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (15:30 IST)

தி லெஜண்ட் படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

தி லெஜண்ட் திரைப்படம் நேற்று பேன் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியானது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.. தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இன்று வெளியாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்காக பல கோடி ரூபாயை விளம்பரத்துக்காக படக்குழு செலவிட்டது. தமிழ்நாட்டில் படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளார்.

படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் முதல் நாள் ஓப்பனிங் இந்த படத்துக்கு நல்லவிதமாக கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் நாளில் திரையரங்குகள் மூலமாக 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஓப்பனிங்குக்குக் காரணம் ஹீரோ சரவணனின் கடையில் வேலைப் பார்ப்பவர்கள் மற்றும் அவர் மூலமாக டிக்கெட் கிடைத்தவர்கள் அதிகளவில் படத்தை முதல் நாள் பார்த்ததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.