வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:40 IST)

அரசிடம் இழப்பீடு கேட்டு முன்னணி நடிகை நீதிமன்றத்தில் மனு !

சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார்.

ஆனால்இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுக்கப்பு வழங்கப்பட்டது.மும்பையில் சிவசேனா ஆட்சி என்பதால், மேற்கு பாந்தாராவில் உள்ள  அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பை கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் மும்பியைவிட்டு வேதனையுடன் வெளியேறுவதாக கங்கனா ரனாவத் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை மாநகராட்சியிடன் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா ரனாவத் மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் சில திருத்தங்களைச் செய்தும்,  தனது வீட்டில் 40% இடிந்துள்ளது என்றும் சில பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டு குறிப்பிட்டுள்ளார்.