1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (16:51 IST)

''மாபெரும் ஹிப்ஹாப் பாடகரின் கடைசி நிகழ்ச்சி''- விஜயகாந்த் டிவீட்

உலகப் புகழ்பெற்ற ஹிப்ஹாப் பாடகர்களை  இந்தியாவிற்கு வரவழைத்து,  பல்வேறு இசை நிகழ்ச்சிகளை  தனது மகன்  விஜயபிரபாகரன்& ட்ராக்டிகல் கான்சர்ட்ஸ் நிறுவனம் நடத்த உள்ளதற்கு நடிகர் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எனது மூத்த மகன் விஜயபிரபாகரன் & ட்ராக்டிகல் கான்சர்ட்ஸ்  வம்சிதரன் (Tractical Concerts)
நிறுவனமும் இணைந்து மாபெரும் ஹிப்ஹாப் இசை நிகழ்ச்சியை மும்பையில் DY பாட்டில் ஸ்டேடியத்தில் , 25 நவம்பர் 2023 நடத்த உள்ளனர்.

உலகப்புகழ்பெற்ற ஹிப்ஹாப் ராப் பாடகர் "50 சென்ட்" (50CENT) இந்தியா வருகைதந்து, இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இது அவரது கடைசி இசை நிகழ்ச்சி பயணம் (Final Music Tour Live Concert) என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்காலத்தில் மேலும் பல உலகப்புகழ்பெற்ற இசை கலைஞர்களை இந்தியாவிற்கு வரவழைத்து,  பல்வேறு இசை நிகழ்ச்சிகளை  விஜயபிரபாகரன்& ட்ராக்டிகல் கான்சர்ட்ஸ் (Tractical Concerts) நிறுவனம் நடத்த உள்ளனர்.

அவர்களது முயற்சிகள் அனைத்தும் மாபெரும் வெற்றியடைய  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’  என்றுதெரிவித்துள்ளார்.