வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (15:29 IST)

கணவர் மீது அவ்வளவு காதலா? அமெரிக்கா சென்று கணவருக்காக மணிமேகலை செய்த விஷயம்!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். அதன் பின்னர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆகி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்க சென்றிருக்கும் மணிமேகலை தற்போது கணவர் முகத்தை சிற்பமாக செதுக்கிய வீடியோவை வெளியிட்டு, கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.