300 நாட்களை கடந்த செவ்வந்தி சீரியல்... குழுவினரோடு கொண்டாடிய திவ்யா!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா. இவர் அதே சீரியலின் ஹீரோவான அர்னவ்வை காதலித்து திருமணம் செய்யாமலே கர்ப்பம் ஆனார். அதன் பின்னர் இருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது.
திவ்யா தன் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால், தன் கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதன் பின்னர் 3 மாதக் கருவைக் கலைக்க நடிகை திவ்யா ஸ்ரீதர் முயற்சி செய்வதாக கணவர் அர்னவ் போலீஸில் புகாரளித்தார்.
பின்னர் அர்னவ் வேறு நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி ஆதாரத்தை வெளியிட்டார். இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் அர்னவ்வின் குழந்தையை திவ்யா பெற்றெடுத்தார். இருவரும் பிரிந்தே வாழ்த்து வருகிறார்கள். திவ்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் செவ்வந்தி சீரியல் 300 நாட்களை கடந்த நிலையில் அதனை அந்த குழுவினரோடு திவ்யா தன் கைக்குழந்தையோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.