செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (15:38 IST)

உலக அளவில் ஃபேமஸ் ஆன குட்டி ஸ்டோரி! – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் நடித்து வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் உலகளவில் வைரலாகி வருவதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ”மாஸ்டர்”. கல்லூரி பேராசிரியராக விஜய் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “குட்டி ஸ்டோரி” சில நாட்களுக்கு முன்பு வெளியானது. நடிகர் விஜய்யே பாடியுள்ள இந்த பாடல் விஹய் ரசிகர்களால் மட்டுமல்லாது பலராலும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் அதிகமாக மக்கள் கேட்ட பாடல்களை “Global Trending Top 50” என்ற பட்டியலாக வெளியிட்டு வருகிறது கானா பாடல் தளம். இந்நிலையில் விஜய்யின் இந்த ‘குட்டி ஸ்டோரி’ பாடல் உலகளவில் ட்ரெண்டாகி உள்ள 50 பாடல்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பிரபல ஆங்கில பாடல்களுக்கு இணையாக குட்டி ஸ்டோரி ட்ரெண்டிங் ஆகியிருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த செய்தியை சோனி மியூசிக் தென்னிந்திய ட்விட்டர் தளம் பதிவிட்டுள்ளது.