புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (13:26 IST)

கூத்துப்பட்டறை ந முத்துசாமி காலமானார்

நாடக நடிகரும் எழுத்தாளருமான ந. முத்துசாமி அவர்கள் இன்று காலமானார்.

விஜய் சேதுபதி, விமல், குரு சோமசுந்தரம் மற்றும் விதரர்த் போன்ற பல சினிமாக் கலைஞர்கள் உருவாகக் காரணமாக இருந்த கூத்துப்பட்டறை என்ற நாடக அமைப்பைத் தோற்றுவித்த நாடகநடிகர் மற்றும் இயக்குனர் ந முத்துசாமி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

தமிழ் நாடகத்துறையின் முதல் நவீன நாடகம் என சொல்லப்படும் ’காலம் காலமாக’ என்ற நாடகத்தை எழுதி இயக்கியதன் மூலம் நாடகத்துறையில் புகழ் பெற்றார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில்  இயங்கியுள்ள முத்துசாமி நாடகத்துறையின் உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி விருதை 1999-ல் பெற்றுள்ளார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2012-ல் பெற்றுள்ளார்.

நாடகத்துறையில் மட்டுமல்லாமல் எழுத்துத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள முத்துசாமி ந முத்துசாமி கட்டுரைகள் என்ற நூலையும் நீர்மை என்ற சிறுகதை தொகுப்பையும் எழுதியுள்ளார். சீமான் இயக்கிய வாழ்த்துகள் மற்றும் அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களில்  நடித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை எனும் கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 82.உடல்நலக்குறைவு காரணமாக இன்று அவர் சென்னையில் காலமானார்.