திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (13:48 IST)

ஜி 5 தளத்தில் சாதனைப் படைத்த கூச முனிசாமி வீரப்பன் தொடர்!

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலையும், வீரப்பன் குரலையும் பதிவு செய்யும் விதமாக நக்கீரன் உருவாக்கத்தில் ஜி 5 தளத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர் வெளியானது.

இந்த தொடர் வீரப்பன் உயிரோடு இருந்த போது அவரை நக்கீரன் குழுவினர் சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகளை கொண்டு உருவாக்கபட்டு இருந்தது. இந்த தொடரில் வொர்க்‌ஷாப்புகளில் மக்கள் எப்படி கொடுமையான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்த மறு உருவாக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

அதுபோல நகைச்சுவை ததும்ப தனது கதையை விவரிக்கும் வீரப்பனின் பேச்சுமுறையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் ஜி 5 தளத்தில் இந்த தொடர் 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.