இந்திதான் தேசிய மொழியா… கிச்சா சுதீப்பிடம் அஜய் தேவ்கன் வாக்குவாதம்!
இந்தி தேசிய மொழி என்பது குறித்து நடிகர் அஜய் தேவ்கன் கூறியது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப், பேன் இந்தியா திரைப்படங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இனி இந்தி தேசிய மொழி இல்லை என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் “இந்தி தேசிய மொழி இல்லை எனில் ஏன் உங்கள் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்.” என வாக்குவாதம் செய்யும் விதமாக கேட்டிருந்தார்.
இதற்கு கிச்சா சுதீப் ஒரு பக்கம் பதிலளிக்க, இணையத்தில் தென்னிந்திய ரசிகர்கள் அஜய் தேவ்கனைக் கடுமையாக விமர்சித்தும், அவரின் முட்டாள்தனமாக கருத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.