புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (12:34 IST)

மீண்டும் இணைந்த அசுரன் கூட்டணி…. வெளியான செம்ம தகவல்!

தனுஷின் வாத்தி படத்தில் கென் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் எக்ஸ்க்ளூசிவான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தில் தனுஷோடு கென் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.