சத்தம் இல்லாமல் நடக்கும் வடசென்னை 2 படப்பிடிப்பு!
வடசென்னை படத்தின் ப்ரிக்வள் எடுக்க இயக்குனர் வெற்றிமாறன் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
வடசென்னை படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாத்திரமாக அமிரின் ராஜன் பாத்திரம் அமைந்தது. ஆனால் படத்தின் நீளம் கருதி அவரின் காட்சிகள் குறைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் ராஜனின் வாழ்க்கையை மட்டும் தனியாக ராஜன் வகையறா என்று எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் விரும்பினார். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜனின் பதின் பருவக் காட்சிகளில் கென் கருணாஸை நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது நடந்து வருவதாகவும், இடைவெளியோடு அவ்வப்போது கென் கருணாஸ் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.