1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:00 IST)

எண்ணெய் வச்சி வழிச்சி வாரிய தலை - கீர்த்தி சுரேஷின் பள்ளி புகைப்படம் வைரல்!

நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் இணையத்தில் வைரல்!
 
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என மார்க்கெட் பிடித்து வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 
 
அதன் பிறகு தமிழில் இது என்ன மாயம் படத்தில் ஹீரோயினாக நடித்து என்டரி கொடுத்தார். தமிழில் ரஜினி முருகன், தொடரி  உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நல்ல அடக்கமான மாணவி போல் இருக்கும் கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.