‘சாவித்ரி’யாக நடிக்கத் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்
‘சாவித்ரி’யின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஷூட்டிங், நேற்று முதல் தொடங்கியது.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்க, பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில், வெள்ளை ரிப்பன் கட்டப்பட்ட இரட்டை ஜடை, பஃப் வைத்த ஜாக்கெட் என அந்தக்கால உடையணிந்துள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படம் நேற்று இரவு வெளியானது. இந்த புகைப்படம்தான், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.