கீர்த்தி சுரேஷ் தொடங்கும் பூமித்ரா… சருமப் பராமரிப்பு பொருட்கள் விற்பனை!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோழர்களுடன் இணைந்து சருமப் பராமரிப்புப் பொருட்கள் சம்மந்தமான தொழிலை தொடங்கியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார். சருமப் பராமரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் பூமித்ரா என்ற நிறுவனத்தை தனது நண்பர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் பொருட்கள் ஆர்கானிக் முறையில் உருவாக்கப்பட்டவை என சொல்லப்படுகிறது.