ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (08:07 IST)

அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகும் கவினின் இரண்டு படங்கள்!

கவின் நடித்த ‘ஸ்டார்’திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் சராசரியான வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து கவின் நடிப்பில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் ‘கிஸ்’, சிவபாலன் இயகும் “பிளடி பெக்கர்’ மற்றும் விகர்ணன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

இந்த படங்களில் பிளடி பெக்கர் திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதே கிஸ் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.