செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (07:26 IST)

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு பாடலைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் கிறிஸ்துமஸ்ஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுபற்றியும் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான ராம்சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படக்குழுவைக் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு கேம்சேஞ்சர் படத்தின் ‘ரா மச்சான் ரா’ என்ற பாடல் நாளை ரிலீஸாகவுள்ளது. இது சம்மந்தமான ப்ரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.