புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (22:27 IST)

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்: சோகத்தில் டுவிட்டர் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் சற்றுமுன் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கடைசி வரை தாக்குபிடித்து வந்த கவின், பிக்பாஸ் அறிவித்த ரூபாய் ஐந்து லட்சத்திற்காக இன்று வெளியேறும் முடிவை எடுத்தார். அவருடைய முடிவில் ஒரு ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவும் தன்னுடைய முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் சக போட்டியாளர்களிடம் விளக்கி புரிய வைக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் கடைசிவரை சமாதானம் ஆகவில்லை 
 
 
கடைசி நிமிடம் வரை கவின் மனதை மாற்ற முயற்சித்தனர். ஆனால் கவின் தான் வந்த வேலை முடிந்து விட்டதாகவும் இதற்குமேல் வெளிப்படையாக என்னால் கூற முடியாது என்பதால் என்னுடைய முடிவை தயவு செய்து புரிந்து கொள்ள முடியும் என்று கூறி விட்டு வெளியேறிவிட்டார் 
 
 
கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என்றும் கடைசி நேர திருப்பம் ஏற்படும் என்றும் பலர் கணித்திருந்தனர். இருப்பினும் அவர்களது கணிப்பை பொய்யாக்கி விட்டு கவின் சற்றுமுன் வெளியேறிவிட்டார். இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி 10 நாட்களே இருக்கும் நிலையில் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 50 லட்சம் கிடைக்கும் என்றாலும் மற்ற போட்டியாளர்களுக்கு பரிசுப் பணம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் கவினுக்கு 5 லட்சம் ரூபாய் கிடைத்தது ஒரு வெற்றியாகவே அவரைப் பொறுத்தவரையில் பார்க்கப்படுகிறது.
 
 
கவின் போட்டியிலிருந்து விலகினாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். கவின் வெளியேற்றத்தை அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்