திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:06 IST)

சற்றுமுன் பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறினார் கவின் - ஷாக்கிங் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சற்றுமுன் கவின் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி இணையத்தில் வீடியோவுடன் வெளியாகியுள்ளது.


 
நேற்று 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இப்போதே வெளியில் செல்ல விரும்புவோர் சென்றுவிடலாம் என பிக்பாஸ் சலுகையை அறிவித்திருந்தார். இதில் கவின் நான் செல்கிறேன் என்று கூறி முன்வந்தார். இது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்து. நேற்றைய எபிசோடில் கவின் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் காண்பிக்காமல் நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 
 
இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் லீக்காகியுள்ளது. இதில் கவின் வீட்டிலிருந்து வெளியேறிவிடுகிறார். கவின் வெளியேறியதால் சாண்டி லொஸ்லியா இருவரும் அழுகிறார்கள். லொஸ்லியா  மெயின் டோர் அருகில் நின்று கதறி அழுகிறார். எனவே இன்று கவின் வெளியேறியது உறுதியாகிவிட்டது.