புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (17:23 IST)

ரத்த வெள்ளத்தில் நாயகியுடன் லிஃப்டில் உட்கார்ந்திருக்கும் கவின்: மிரட்டும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ரத்த வெள்ளத்தில் நாயகியுடன் லிஃப்டில் உட்கார்ந்திருக்கும் கவின்
’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தாலும் நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களான முகின் மற்றும் தர்ஷன் ஆகியோர்களுக்கு விட்டுக் கொடுத்து போட்டியில் இருந்து விலகி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வரப்பிரசாத் என்பவர் இயக்கிய ஒரு புதிய படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு என்ற ’லிப்ட்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர். ஒரு லிஸ்டில் கவினும் நாயகியும் ரத்த வெள்ளத்தில் உட்கார்ந்து இருப்பது போன்று உள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த படத்தில் கவின் ஜோடியாக அம்ரிதா அய்யர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‘பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் இவரது நடிப்பை விஜய்யே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கவின் ஆர்மியினர் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது