வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (07:12 IST)

ரிலீஸ் தினத்தில் 'கவண்' படத்திற்கு கிடைத்த உற்சாக செய்தி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடித்த 'கவண்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.


 


அதுதான் இந்த படத்திற்கு கிடைத்த வரிவிலக்கு. இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளதால் விநியோகிஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 'கவண்' திரைப்பாம் இன்று உலகம் முழுவதும் 624 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் 317 திரையரங்குகளிலும், கேரளா, கர்நாடகா உள்பட இந்தியாவில் 137 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 170 திரையரங்குகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர், விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.