திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:42 IST)

புதிய சீரியலில் நாயகியாக கஸ்தூரி… எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

நடிகை கஸ்தூரி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளார்.

முன்னாள் நடிகையான கஸ்தூரி சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். அதே போல சினிமா ரசிகர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். அதே போல திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். அதனால் அவரை இப்போதே பலரும் அவர் பாஜக ஸ்லீப்பர் செல் என்று சொல்லப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன் முதலாக சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார்.