1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (08:15 IST)

பிறந்த நாள் வருது, ஆனா வயசு ஆக மாட்டேங்குது: விஜய் குறித்து கஸ்தூரி

விஜய்க்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வருது ஆனால் வயது ஆக மாட்டேங்குது என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 
 
நேற்று விஜய்யின் பிறந்தநாளை அடுத்து கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவர் நடித்து வரும் 65வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் இந்த இரண்டு போஸ்டர்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை கஸ்தூரி விஜய்க்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வருது ஆனால் வயசு ஆக மாட்டேங்குது என்று குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவிட்டை விஜய் ரசிகர்கள் வசித்து வருகின்றனர்