வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (14:24 IST)

நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு.. திருடியவர் கைது!

குறும்படங்களின் மூலம் இயக்குனர்கள் அலை ஒன்று தமிழ் சினிமாவில் வீசிய போது அவர்களின் படங்களில் நடிகராக நடித்து புகழ்பெற்றவர் கருணாகரன். இவர் நடித்த சூதுகவ்வும், ஜிகர்தண்டா மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு, இவருக்கு பரவலான கவனத்தையும் பெற்றுத்தந்தன. இதையடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார் கருணாகரன்.

சமீபத்தில் இவரின் தந்தையான காளிதாஸ், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 77. காளிதாஸ் கேபினட் செயலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் கருணாகரன் வீட்டில் 60 பவுன் அளவுக்கு நகைகள் திருடு போயுள்ளதாக அவர் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கைரேகையை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் கருணாகரன் வீட்டில் பண்புரிந்த பெண்தான் அந்த நகைகளைத் திருடியதாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.