புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (13:56 IST)

இப்படிபட்ட ஒருத்தர் தலைவரா? பாரதிராஜாவை விட்டு விளாசிய கரு பழனியப்பன்

பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. ஆனால், அதற்காக அவரை கடவுளாக்க வேண்டாம் என கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி பாரதிராஜா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற பதவிகளுக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக பாரதிராஜா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 
 
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் வரும் சங்கடங்ளை தவிர்க்க பதவியை ராஜினாமா செய்கிறேன். முறையாக தேர்தல் பங்கேற்று வெற்றி பெற்றி பெற்ற பின் தலைராக விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், சங்க உறுப்பினர்கள் சிலர் பாராதிராஜாவை தலைமை பொறுப்பை ஏற்கும் படி கோரிக்கை வைத்தனஎர். இந்நிலையில், கரு பழனியப்பன் இது குறித்து பேசியதாவது, இயக்குநர் சங்கதிற்குள் சென்றால் ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன, அது சங்கமா? இல்லை கேளிக்கை விடுதியா? என்பதே தெரியவில்லை. 
 
உறுப்பினர்கள் அனைவரிடமும் கேட்காமல் எப்படி பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுக்கலாம்? அவர் எப்போதும் சங்க கூட்டத்திற்கு வருவதே இல்லை. கடந்த முறை மட்டுமே வந்தார். 
 
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. ஆனால், அதற்காக அவரைக கடவுளாக்க வேண்டாம். அவரும் அதை விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். மற்றவரகளை போல் அவரும் தேர்தலில் நின்று ஜெயித்து வரட்டும் அதுதான் ஜனநாயகம் என விமர்சித்து பேசியுள்ளார்.