வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:57 IST)

விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? கார்த்திக் சுப்பராஜ் தகவல்!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

விக்ரம்மின் 60 ஆவது திரைப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவலைப் படக்குழு மறுத்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் எப்படி உருவானது என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு நேர்காணலில் ‘ஜகமே தந்திரம் படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் இருந்தபோது, விக்ரம் படத்திற்கான அழைப்பு வந்தது. இந்த படம் எதிர்பாராமல் உருவானது. எப்போதுமே நான் விக்ரம்முடன் பணியாற்ற ஆர்வமாக இருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.