ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (08:14 IST)

விக்ரம் 60 படத்தின் முக்கிய அப்டேட் – ஒளிப்பதிவாளர் இவர்தான்!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விக்ரம்மின் 60 ஆவது திரைப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவலைப் படக்குழு மறுத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவள், ராக்கி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா சியான் 60 படத்துக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இதை அவரே தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.