செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (11:36 IST)

6 வருடத்துக்குப் பிறகு கெட்டப் மாற்றிய கார்த்தி… வெளியான வைரல் புகைப்படம்!

நடிகர் கார்த்தி சமீபத்தில் தன்னுடைய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர, அது வைரல் ஆகியுள்ளது.

நடிகர் கார்த்தி தன்னுடைய நடிப்பில் சர்தார், விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களை நடித்து முடித்துள்ளார். இதையடுத்து டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க ராஜுமுருகன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை ராஜு முருகன் தற்போது முடித்துள்ளார். மேலும் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக தாடி மீசை கெட்டப்பில் இருந்த நடிகர் கார்த்தி, தற்போது புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் வெள்யிட அது இப்போது வைரலாகியுள்ளது.