திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (11:19 IST)

’காந்தாரா’ படம் குறித்து சர்ச்சையாக பேசிய பிரபல நடிகர் கைது!

kantara
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’காந்தாரா’ திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல நடிகர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ சமீபத்தில்  வெளியானது. இந்த படம் ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பூத கோலா என்ற நடன காட்சியை ரிஷப் ஷெட்டி வைத்திருந்தார். இந்த கலை இந்துமத கலாச்சாரத்தின் ஒரு வகை என்றும் கூறியிருந்தார் 
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார், இந்து மதம் தோன்றுவதற்கு முன்பே ஆதிவாசிகள் இந்த கலையை பயன்படுத்தி வந்தார்கள் என்றும் ’காந்தாரா’ படம் மூலம் இந்து மதத்தை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார் 
 
இதனையடுத்து அவர் மீது இந்து அமைப்பினர் புகார் அளித்ததன் அடிப்படையில் நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran