ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (22:26 IST)

பைத்தியக்காரங்களை எல்லாம் பிக்பாஸுக்கு கூட்டிட்டு வரணும். கஞ்சா கருப்பு

விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசில நேரங்களில் மட்டும் சுவாரஸ்யமாகவும், பல நேரங்களில் போரடிக்கும் வகையில் போய்க்கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் டிவி நிர்வாகம் எதிர்பார்த்த டி.ஆர்.பி ரேட்டிங் கிடைப்பது சந்தேகமே



 
 
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சாகருப்பு பேசியபோது, 'இந்த பிக்பாஸ் வீடு மனநிலை சற்று சரியில்லாதவர்களையும் சரிப்படுத்திவிடும், இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஊரில் உள்ள ஒரு 100 மன நோயாளிகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வரணும்' என்று கூறினார்.
 
மேலும் தான் அனைவரையும் இங்கு சிரிக்க வைத்து கொண்டிருந்தாலும் தனது குழந்தைகள், அம்மா எப்படி இருக்கின்றார்களோ என்ற கவலை தனக்கு உள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.