செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (17:55 IST)

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் ஒன் என்ற படத்தை ஏஎல் விஜய் இயக்கிய நிலையில் அடுத்ததாக அவர் இயக்கும் திரைப்படத்தில் கங்கனா ரனாவத்  நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மாதவன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் இவ்வருட இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், ஹிந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு "லைட்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை  ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே மாதவன் மற்றும் கங்கனா ஆகிய இருவரும் தனு வெட்ஸ் மனு என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva