விருது விழாக்களுக்கு செல்ல சரியான உடை இல்லை – கங்கனா ரனாவத் பகிர்ந்த தகவல்!
பாலிவுட்டில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனி ஆளுமையாக வளர்ந்து நிற்பவர் கங்கனா ரனாவத்.
பாலிவுட்டில் மிகப்பெரும் ஆளுமையாக வளர்ந்து நிற்கும் கங்கனா ரனாவத், தைரியமாக எதையும் வெளிப்படையாக பேசும் தனித்தன்மை கொண்டவர். பாலிவுட்டில் வாரிசு அரசியல் நிலவுவதை பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் நுழைந்த புதிதில் தான் பட்ட கஷ்டங்களை அவர் ஒரு இன்ஸ்டாகிராம் உரையாடலில் தெரிவித்துள்ளார்.
அதில் ‘பாலிவுட்டில் நான் நுழைந்தபோது, யாரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏனென்றால் நான் எந்த குடும்பத்தின் பின்னணியில் இருந்தும் வரவில்லை. என் படத்தின் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ள நான் செல்ல இருந்தபோது, என்னிடம் அதற்கு சரியான உடை கூட இல்லை. அப்போது என்னுடைய ஆடை வடிவமைப்பாளரான ரிக் ராய்தான் எனக்கு உதவினார். அப்போது அவரே கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக இருந்தனர். அவர் இல்லை என்றால் நான் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்றிருக்கவே முடியாது’ எனக் கூறியுள்ளார்.