அட்ஜஸ்ட் பண்ணினா தான் வாய்ப்புன்னு சொல்லி கூப்பிட்டாங்க - காஞ்சனா பட திருநங்கை பகீர்!
ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் கடந்த 2011 ஆம் ஆண்டு 'காஞ்சனா' என்ற பெயரில் வெளிவந்தது. இதில் காஞ்சனா சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதில் சரத்குமாரின் மகளாக பிரியா என்ற திருநங்கை முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிப்பது, சினிமா வாய்ப்பு மற்றும் அட்ஜ்ஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றி பேசிய அவர்... இயக்குனர், தயாரிப்பாளர்கள் என நிறைய பேர் நேரடியாகவே என்னை படுக்க அழைத்தார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
என்னுடை முகநூல் பக்கத்தின் மூலமாக என்னை அணுகிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் நீங்கள் எல்லாம் எப்படி இந்த மாதிரி மாறினீர்கள் என என்னுடைய அந்தரங்க விஷயங்களை குறித்து கேட்டார். உடனே நான் போன் கட் செய்துவிட்டு இப்படிப்பட்ட வாய்ப்பே வேண்டாம் என கூறிவிட்டேன். இதே போல் பலர் என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணினால் தான் வாய்ப்பு என நேரடியாக சொல்லி அழைப்பார்கள் என சினிமா துறையில் திருக்கைகள் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படையாக கூறியுள்ளார்.