பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கிறாரா கமல்ஹாசன்?
பிக்பாஸ் சீசன் 5 ஐ கமல்ஹாசனே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டது முதலே கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் புதிய சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இதுவரை இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த எண்டமோல் நிறுவனத்துக்குப் பதிலாக இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியின் சி இ ஓ வான மகேந்திரனும் இணைந்து தயாரிக்க உள்ளனராம்.