1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:05 IST)

தளராத தன்முனைப்பே அவரின் வெற்றி… கே வி ஆனந்துக்கு கமல் அஞ்சலி!

மறைந்த இயக்குனர் & ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்துக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வர், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு திரையுலகினரைச் சேர்ந்த கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.’ என கூறியுள்ளார்.