செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (21:18 IST)

50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார்: கமல் இரங்கல்

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் நெடுமுடி வேணு அவர்கள் இன்று காலமானதை அடுத்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
நெடுமுடி வேணு அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற மலையாளத் திரையுலகில் அவர் ஒரு குருவாக அனைத்து நடிகர்களுக்கும் விளங்கினார் என்றும் நடிகர் நடிகையர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்தநிலையில் நெடுமுடி வேணு உடன் இந்தியன் திரைப்படத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
500 படங்களில் நடிகர் என்பதோடு, திரைக்கதாசிரியர், இயக்குநர் எனவும் பரிமளித்தவர் நெடுமுடி வேணு. அனைத்துவகைச் செயல்பாடுகளுக்கும் தேசிய, மாநில விருதுகளை வென்றவர். 50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார். அஞ்சலிகள்.