புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (14:43 IST)

விக்ரம் படத்தின் பின்னணி இசை… இழுத்தடிக்கும் அனிருத்? அதிருப்தியில் கமல்!

விக்ரம் திரைப்படம் ரிலீஸாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான பின்னணி இசையை இன்னும் முழுதாக அனிருத் முடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் விக்ரம் படக்குழுவினரான லோகேஷ் மற்றும் கமல் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு முன் கூட்டியே படத்தை அனுப்புவதில் கடைசி நேர சிக்கல் எழலாம் என சொல்லப்படுகிறது.